தடுப்பூசி பெற்ற ஆயிரம் ஊழியர்கள் பாதிப்பு- நீடிக்கும் மர்மம்

சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 40க்கும் அதிகமான ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது பகுதியை பெற்றுக் கொண்ட பலர் திடீரென நோய்வாய்ப்பட்டு அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டதன் பின்னர் மயக்கம், தலைசுற்று மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்பட்ட 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம், பண்டுகலகம ஆடை தொழிற்சாலை ஊழியர்களே இவ்வாறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆடை தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 40 க்கும் அதிகமானோர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

தடுப்பூசி பெற்ற ஊழியர்கள் சில மணி நேரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும். எனினும் அவர்கள் ஓய்வின்றி பணியாற்றியுள்ளனர். அத்துடன் தொழிற்சாலையில் குளுரூட்டி பாவனையில் இருந்தமையினால் இவ்வாறான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் 40க்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.