யாழில் இளைஞனின் சடலம் மீட்பு – கொலையா? தற்கொலையா? என பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் உயிரிழந்த நிலையில் இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராமாவில் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான சிவகுமார் கஜேன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்தார். குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அவருடைய மரணம் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.