அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி நிதி நிறுவனமான சர்வதேச அபிவிருத்தி நிதிக் கழகம் (ஐ.எஃப்.சி) இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது என்று இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தமது தொழிலை முன்னேற்றவும் , தனியார் துறை முதலீட்டை வலுப்படுத்துவதும், பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதும் இந்த நிதியுதவியின் நோக்கமாகும் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த நிதி இலங்கையில் உள்ள ஒரு தனியார் வங்கி மூலம் வழங்கப்படுகிறது, இது சர்வதேச அபிவிருத்தி நிதிக் கழகம் இலங்கைக்கு வழங்கிய மிகப் பெரிய தொகை ஆகும்.
இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலினா பி. டெப்லிட்ஸ், இந்த நிதி இலங்கை பெண்கள் பொருளாதார ரீதியாக வலுவடைய உதவும் என்று தெரிவித்துள்ளார்.
The U.S. is committed to helping 🇱🇰 women access resources to grow their business. That’s why 🇺🇸 is providing $150 Mn in funding to @dfcclk, a portion of which will be used to support women entrepreneurs. It's the largest @DFCgov loan ever provided to 🇱🇰!https://t.co/GAYCL0pyMJ pic.twitter.com/AEvEXlaG8L
— Ambassador Teplitz (@USAmbSLM) July 12, 2021