மட்டக்களப்பு, காத்தான்குடியில் ஐஸ், கஞ்சாவுடன் 5 பேர் கைது

காத்தான்குடி, மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவுகளில் உள்ள பகுதிகளில் ஐஸ் போதை பொருள் மற்றும் கஞ்சாவுடன் 5 பேரை இன்று செவ்வாய்க்கிழமை (20) கைது செய்துள்ளதாக அந்தந்த பிரதேச பொலிசார் தெரிவித்தனர்.

 

அந்த வகையில், காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் காத்தான்குடி 6 ஆம் பிரிவு பாலமுனை பகுதியில் இன்று பகல் 1430 மில்லிக்கிராம், 490 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இருவரையும், 4250 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.

அதேவேளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள நாவக்கேணி மற்றும் குமாரபுரம் பகுதியில் 100 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் ஒருவரையும், 24 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் ஒருலர் உட்பட இருவரை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர்

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.