சீன தொழிற்சாலையொன்றில் பாரிய வெடிப்பு சம்பவம்

சீனாவின் மத்திய மாகாணமான ஹெனானில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் பாரிய வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

இந்த சம்பவம் டெங்ஃபெங் நகரில் உள்ள ஒரு ஆலையில் செவ்வாய்க்கிழமை நடந்ததாக கூறப்படுகிறது.

அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தற்போது வரை, வெடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் விபத்துக்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை.