நாட்டில் வாழ்வதற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது – கிளிநொச்சி மாவட்ட பெண்கள் செயற்பாட்டாளர் ருசாநந்தினி

சட்டங்களை இயற்றுபவர்கள் வீடுகளிலேயே இவ்வாறான நிலை ஏற்படின், நாங்கள் எப்படி வாழ்க்கையை நடத்தப்போகின்றோம் என்ற விடயம் அச்சத்தை ஏற்படுத்துகின்றது என கிளிநொச்சி மாவட்ட பெண்கள் செயற்பாட்டாளர் சுரேஸ்குமார் ருசாநந்தினி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஊடக மையத்தி்ல் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு மற்றும் கிசாலினியின் மரணத்திற்கு நீதி பெற்றத்தருமாறு கோரி ஏற்படுத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 17 ம் திகதி நடந்த ஹிசாலினியின் கொலை மற்றும் இல்ஙகையில் பாதிக்கப்படுகின்ற சிறுமிகள், பெண்கள் தொடர்பாகவும் நாங்கள் இன்று பேசுகின்றோம்.

பெண்களிற்கெதிரான வன்முறைகளிற்கு சட்டங்கள், தொழில் கட்டளை சட்டம் மற்றும் கட்டாய கல்வி போன்ற சட்டங்கள் இருந்தும் அவை உறங்கிக்கொண்டிருக்கின்றது.

இவ்வாறான சட்டங்கள் ஏன் மௌனித்திருக்கின்றது. அடிக்கடி பெண்கள் வன்முறைக்குள்ளாகின்றார்கள். என்ன காரணங்களால் இந்த சட்டங்கள் மௌனித்திருக்கின்றது?

அவை மௌனித்திருப்பதற்கு அரசியல் பலமா அல்லது பண பலமா அல்லது அதிகார பலமா என்று சொல்ல தெரியவில்லை. உண்மையில் அதிகாரத்தில் இருப்பவர்களும், அரசியலில் ஈடுபடுபவர்களும் பணபலம் படைத்தவர்களுக்கும் உள்ள சட்டங்கள் வேறா?

பெண்கள் சிறுமிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றோம் என்பதை இலங்கை தேசத்தில் உள்ள அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வலிகள் சுமந்த பெண்கள், பெண்களுடைய கதைகள், பெண்களுடைய சடலங்கள் இன்றும் புதைக்கப்பட்டிருக்கின்றது. அவர்களிற்கான நீதி என்ன? உண்மையில் குள்ளம் விளைவிக்கின்றவர்கள் தப்பிக்கின்றார்கள். விடுவிக்கவும் படுகின்றார்கள்.

உண்மையில், நிரபதாரிகள் பலர் சிறைகளிலே இருக்கின்றார்கள். இதற்கான நீதி என்ன? இந்த பெண்களிற்கான நீதியை எங்களிற்கு தர வேண்டும் என அரசை கடிந்து சொல்கின்றோம்.

பெண்களாகிய நாங்கள் எப்படி வாழப்போகின்றோம் என்ற பயப்பீதியுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எமக்கான நீதியை சரியான முறையிலே எமக்கு தரப்பட வேண்டும்.

ஹிசாலினியின் கொலை தொடர்பில் சரியான நீதியை எங்களுக்கு தரவேண்டும். பெண்களிற்கான நீதி கிடைக்கும் என்பது தொடர்பில் அச்சத்திற்குரிய விடயமாக இருக்கின்றது.

பெண்கள் எப்படி நடமாடுவது, எவ்வாறு பேசுவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அச்சமாகவே உள்ளது. சிறுமியின் மரணம் உள்ளிட்ட விடயங்களிற்கு அரசு நீதுியை வழங்க வேண்டும்.

சட்டங்களை சரியானமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை கூறுகின்றோம். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்றுள்ள இந்த கொலையானது, பரிதாபத்திற்குரிய விடயமாக இருக்கின்றது.

ஏனெனில், சட்டங்களை இயற்றுபவர்கள் வீடுகளிலேயே இவ்வாறான நிலை ஏற்படின், நாங்கள் எப்படி வாழ்க்கையை நடத்தப்போகின்றோம் எனற விடயம் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. இந்நிலையை உணர்ந்து நீதியை பெற்றுத்தர வேண்டும் என பெண்களாகிய நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.