ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிகோரி யாழில் போராட்டம்

சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி இன்றையதினம் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

 

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், மாற்றத்திற்கான மாவட்ட இளைஞர் பேரவை, பூந்தளிர் மாவட்ட பெண்கள் அமைப்பு மற்றும் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு உள்ளிட்ட அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.