இலங்கை ரயில்வே திணைக்களம்- விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

 

அலுவலக ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் குறித்த ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, பிரதான ரயில் மார்க்கத்தின் தெமட்டகொட, வனவாசல, எந்தெரமுல்ல, ஹொரபே, வல்பொல, பட்டுவத்த ஆகிய உப ரயில் நிலையங்களிலும், களனி மற்றும் ராகம ஆகிய பிரதான ரயில் நிலையங்களிலும் இவ்வாறு ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று, புத்தளம் ரயில் மார்க்கத்தின், ஜா – எல, நீர்கொழும்பு, குரண ஆகிய பிரதான ரயில் நிலையங்களிலும், பேரலந்த, துடெல்ல, குடாஹக்கபொல, கட்டுவ ஆகிய உப ரயில் நிலையங்களிலும் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், கரையோர ரயில் மார்க்கத்தின் பாணதுறை பிரதான ரயில் நிலையம் மற்றும் பின்வத்த உப ரயில் நிலையத்திலும் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது.

மேலும், களனி ரயில் மார்க்கத்தின் பேஸ்லைன் ரயில் நிலையத்திலும், கொட்டா வீதி உப ரயில் நிலையத்திலும் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது. என அறிவிக்கப்பட்டுள்ளது.