100 தொன் ஒட்சிசனுடன் இலங்கை நோக்கி விரையும் இந்திய கடற்படையின் கப்பல்!

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 100 தொன் ஒட்சிசனுடன் புறப்பட்டுள்ள இந்திய கடற்படையின் சக்தி (INS) என்ற கப்பல் இன்று (22) பிற்பகல் 2 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சென்னை துறைமுகத்திலிருந்து 40 தொன் ஒட்சிசனுடன் நேற்றைய தினம் (21) இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி (SLNS)என்ற கப்பல் ஒன்று இலங்கை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.