அமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் இரகசிய வாக்கெடுப்பை நடத்துங்கள் : ஜனாதிபதி, பிரதமருக்கு சம்பிக்க சவால்

கெரவலப்பிட்டி ‘யுகதனவி’ மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை வழங்குவது குறித்து அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டிருக்கும் ஒப்பந்தமானது மிகமோசமான தேசத்துரோக செயற்பாடாகும்.

இதனால் எமது நாடு அமெரிக்காவின் ‘மின்சார மாஃபியாவிற்கு’ பலியாக நேரிடும் அதேவேளை சர்வதேச ரீதியிலான இராஜதந்திர நெருக்கடிகளுக்கும் முகங்கொடுக்கவேண்டியேற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி மேற்படி ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை சரியா ? தவறா ? என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ‘இரகசிய வாக்கெடுப்பொன்றை’ நடாத்துமாறும் அவர் அரசாங்கத்திற்கு சவால்விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் புதன்கிழமை (3 ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

மின்சாரசபை ஊழியர்களும் அதனுடன் இணைந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அதுமாத்திரமன்றி நாட்டின் சில பகுதிகளில் மின்துண்டிப்பு ஏற்படுமாயின், தாம் அதுகுறித்துப் பொறுப்பேற்றுக்கொள்ளமாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் மின்வழங்கலை அரசாங்கம் அத்தியாவசியசேவையாகப் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. அதன்மூலம் போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு முற்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறான போராட்டங்களால் எதிர்வருங்காலங்களில் மின்சாரமோ அல்லது நீர்வழங்கலோ துண்டிக்கப்படுமானால், அது தற்போது பல்வேறு நெருக்கடிக