அமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை மீது திணிக்காது- அமெரிக்க தூதுவர்

அமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை மீதோ அல்லது வேறு எந்த நாட்டின் மீதோ திணிக்காது என இலங்கை;கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.
பாத்பைன்டரின் நிகழ்வில் webinar organized by the Pathfinder Foundation.  கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான சமீபத்iதைய விஜயத்தின் போது வெளிவிவகார செயலாளர் மைக்பொம்பியோ இதனை தெளிவாக தெரிவித்தார் என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

நண்பன் சகா என்ற அடிப்படையில் தேசிய இறைமை சுதந்திரம் மற்றும் பேண்தகு அபிவிருத்தியில் அனைவரையும் உள்வாங்கும் அணுகுமுறையை இலங்கை பின்பற்றுவதை அமெரிக்கா ஊக்குவிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது அந்த கொள்கைகளின் பின்னால் அணிதிரளுங்கள் என்ற அழைப்பே தவிர அமெரிக்காவின் நேச நாடுகளுக்கான வேண்டுகோளில்லை என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தில் கடற்பயண சுதந்திரத்தை உறுதி செய்வதே அமெரிக்காவின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.