எதிர்காலத்தில் பல தீர்மானங்களை எடுக்க நேரிடும்-கோட்டா வெளியிட்டுள்ள அறிவிப்பு

உலக பொருளாதார சவால்களை வெற்றிக்கொண்டு நாட்டை சுபீட்சமடையச் செய்ய வேண்டுமாயின் பல பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க நேரிடும் என கோட்டா குறிப்பிட்டுள்ளார்.

பிரபல்யமற்ற தீர்மானங்கள் குறித்து தற்பொழுது விமர்சனங்கள் எழுந்தாலும் எதிர்காலத்தில் நல்ல பலன்களை நாடும் மக்களும் அனுபவிப்பார்கள் என கோட்டா குறிப்பிட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஓன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கோவிட் பெருந்தொற்றினால் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.