தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஏற்றுக்கொள்ளச் சொன்னால் அதைப் பரிசீலிப்பேன்” – ரொஷான் மஹாநாம

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், சில நிபந்தனைகளுடன் அதனை ஏற்றுக் கொள்வதாக ரொஷான் மஹானாம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (16) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ரொஷான் மஹாநாம இதனைத் தெரிவித்தார்.
“இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக என்னைப் பொறுப்பேற்கச் சொன்னால், நான் அதை பரிசீலிப்பேன்,” என்று அவர் கூறினார்.
3 அல்லது 4 மாதங்களுக்கு முன்பு அதைச் செய்ய எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் அத்தகைய முடிவை எடுப்பதற்கான நேரம் அதுவல்ல.
“நான் யோசிக்க நேரம் எடுத்தேன்.. இது நான் செய்ய வேண்டிய காரியமா? ஏனென்றால் எனக்கும் சில குறைபாடுகள் உள்ளன. ஏனென்றால் கடந்த சில வருடங்களாக நான் டிரஸ்ஸிங் ரூமில் வேலை செய்யவில்லை.” என அவர் தெரிவித்துள்ளார்