சவேந்திர சில்வாவிற்கு எந்த சட்டத்தின் கீழ் இந்த அதிகாரம் வழங்கப்பட்டது? நாடாளுமன்றில் கேள்வியெழுப்பிய சுமந்திரன்

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் பிரவேசிக்கும் அனைத்து பேருந்து சேவைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உத்தரவிட்டதற்கான அதிகாரம், எந்த சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் நேற்று நள்ளிரவு அமுலுக்கு வந்த ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 15ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை தொடரும் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்தார்.

இவ்வாறான நிலையிலேயே உடன் அமுலுக்கு வரும் வகையிலான உத்தரவுகளை வழங்கும் அதிகாரம் எந்த சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது எனவும் அவர் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.