தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறை வடைகின்றது.
19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் கட ந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி தேசிய தேர் தல்கள் ஆணைக்குழு நிறுவப்பட்டது.
இந்நிலையில், சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பத விக்காலம் இன்றுடன் முடிவடைகின்றது.
ஆணைக்குழுவின் தலைவராக மகிந்த தேசப்பிரிய செயற்பட்டதுடன், பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் மற் றும் ஜனாதிபதி சட்டத்தரணி நலின் அபேசேகர ஏனைய உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர்.
20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய ஏற்படுத்தப்படும் புதிய தேர்தல் ஆணைக்குழு அடுத்த வாரம் நியமிக்கப்பட உள்ளது.
அத்துடன், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய புதிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 5 அங் கத்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
இந்த நிலையில் ஜனாதிபதியினால் பெயரிடப்படும் உறுப் பினர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதி பெற்ற பின்னர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிய மனம் மேற்கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.