ஐசிசி டெஸ்ட் தரவரிசை – ஆல்ரவுண்டர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் ஜடேஜா

டெஸ்ட் போட்டியில்சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
ஆல்ரவுண்டர் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் , 3-வது இடத்தில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின்  உள்ளனர் .
இதேபோல், பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் முதலிடத்திலும், இந்தியாவின் அஸ்வின் 2-வது இடத்திலும் , தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 3-வது இடத்திலும், இந்தியாவின் பும்ரா 10-வது இடத்திலும் உள்ளனர்.