ஆளும் தரப்புக்குள் வலுக்கும் முரண்பாடு -மகிந்தவின் கூட்டத்தை புறக்கணித்த விமல் அணி

அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் இன்றைய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

ஆளும் கட்சிக் குழுக் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றத்தின் குழு அறை இலக்கம் 01 இல் நடைபெற்றது. விமல் வீரவன்ச, வண.அத்துரலிய ரத்ன தேரர், டிரான் அலஸ் கெவிந்து குமாரதுங்க, ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் ஆறு உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருக்கவில்லை.

இதில் ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கலந்துகொண்டுள்ளது.