பிக் பொஸ் வீட்டில் ரியோவிடம் அடிவாங்கிய சோம்! ஏன் தெரியுமா?

பிக் பொஸ் நிகழ்ச்சியில் இவ் வாரம் ‘பாட்டி சொல்லை தட்டாதே‘ என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது என்பதும், குறித்த  டாஸ்க்கை பிக்பொஸ் போட்டியாளர்கள் சுவாரஸ்யமாகவும் ஒருசிலர் புரிந்து கொள்ளாமலும் விளையாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்த டாஸ்க்கை ஒருசிலர் சரியாக புரிந்து கொள்ளாமல் விளையாடியதால் இந்த வார லக்சரி பட்ஜெட் போட்டியாளர்களுக்கு கிடையாது என்று இன்று காலை வெளியான முதல் புரமோவில் பிக்பாஸ் அறிவித்ததார்.

அதுமாத்திரமன்றி  பாலாஜி டாஸ்க்கை புரிந்து கொள்ளாமல் விளையாடியதாக அவருக்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான புரோமோவில் ’பாட்டி சொல்லை தட்டாதே’ டாஸ்க்கில் பத்திரத்தை திருடிய திருடனும் அவருடைய கூட்டாளிகளும் தங்களை தாங்களே அறிமுகப்படுத்துங்கள் என்று கூறியபோது சோம், ரம்யா மற்றும் கேப்ரில்லா எழுந்தபோது சக போட்டியாளர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

அதன்பின்னர் ரம்யா தங்களது டாஸ்க் குறித்து விளக்கினார். எங்களுக்குக் கொடுக்கப்பட்ட ரகசிய டாஸ்க்கை நாங்கள் செய்து முடித்து ரகசியமாக வைத்திருந்தோம் என்று கூறினார்.

அதன்பிறகு பிக்பொஸ் வீட்டிலுள்ள தொலைக்காட்டியில் சோம் பத்திரத்தை திருடும் காட்சி ஒளிபரப்பப்பட்டதை போட்டியாளர்கள் கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் சோம்சேகரின் திருட்டுத்தனத்தை ரசித்த ரியோ அவருடைய முதுகில் செல்லமாக அடிக்க, சோம் கூட்டாளியான ரம்யாவும் சேர்ந்து அடித்தது நகைச்சுவையாக இருந்தது.

நன்றி- Indiaglitz