உள்நாட்டு அயுத உற்பத்திகளை அதிகரிக்கும் இந்தியா

இராணுவ உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை இந்தியா அதிகரித்து வருவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தெற்காசிய நாடுகள் பெரும்பாலும் ஆயத கொள்வனவில் ரஷ்யாவையே பெரிதும் சார்ந்துள்ளன.

உலகின் இரண்டாவது பெரிய இராணுவம், நான்காவது பெரிய விமானப்படை மற்றும் ஏழாவது பெரிய கடற்படை ஆகியவற்றுடன், இந்தியா பல தசாப்தங்களாக ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவை பெரிதும் சார்ந்துள்ளது.

குறிப்பாக ரஷ்யாவிலிருந்து, 1990 களில் அதன் பாதுகாப்பு உபகரணங்களில் 80 சதவீத பங்களிப்பை வழங்கியது.

2000 ஆண்டுகளில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய உற்பத்தியாளர்கள் இந்திய சந்தையில் நுழைந்தவுடன் கணிசமாகக் குறைந்தது.

ஆனால் மொஸ்கோ இன்னும் ஆயத உற்பத்தியிலும் விற்பனையிலும் முக்கிய இடத்தை வகித்து வருகின்றது.

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ரஷ்யா மீது விதிக்கப்பட்ட சர்வதேச தடைகள் எதிர்கால இறக்குமதிகள் குறித்த சந்தேகங்களைத் தூண்டியுள்ளன.

எவ்வாறாயினும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் இராணுவ உபகரணங்களின் பட்டியலின் பிரகாரம் ‘பாதுகாப்புத் துறையில் தன்னம்பிக்கை மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதே எங்களது முக்கிய குறிக்கோளாகும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மேலும் தெரிவித்தார்.

சிக்கலான பாதுகாப்பு கட்டமைப்புகள் , பீரேங்கிகள், சென்சார்கள், மல்டி ரோல் ஹெலிகாப்டர்கள், ரோந்துக் கப்பல்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் இந்திய ஆயுதப் படைகள் பயன்படுத்திய பிற போர்ப் உபகரணங்கள் உள்ளிட்ட 101 பொருட்கள் இறக்குமதி பட்டியலில் உள்ளன.

எனவே அடுத்த 5 வருடத்தில் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தளப்பாடங்கள் உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.