இனப்பிரச்சனையானது அரசாங்க முறைமை பற்றிய பிரச்சினையல்ல!சி.அ.யோதிலிங்கம்

நிறைவேற்று அதிகார முறைமை நீக்கி பாராளுமன்ற ஆட்சி முறைமையை மீளக் கொண்டுவருவதற்கான அரசியல் யாப்பு திருத்த யோசனையை 21வது யாப்பு திருத்தம் என்ற பெயரில் ஐக்கிய மக்கள் சக்தி கடந்த 21ம் திகதி சபாநாயகரிடம் கையளித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தனிநபர் பிரேரணையாக அதனைக் கையளித்திருந்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்படல் வேண்டும். ஜனாதிபதியைப் பாராளுமன்றம் தெரிவுசெய்ய வேண்டும். பிரதமருடன் கலந்துரையாடி அமைச்சரவையை நியமித்தல் வேண்டும். அமைச்சரவையின் தலைவராக பிரதமர் விளங்குவார். அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையும் அமைச்சரவையல்லாத அமைச்சர்களின் எண்ணிக்கையும் தலா 25 ஆக இருக்க வேண்டும்.

கட்சி தாவும் உறுப்பினர்கள் அமைச்சர் பதவியை வகிக்க முடியாது. அரசியலமைப்பு பேரவை மீள உருவாக்கப்படல் வேண்டும். அதில் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் 5பேர் அங்கம் வகித்தல் வேண்டும். தேசிய பாதுகாப்புச் சபை. தகவல் அறியும் ஆணைக்குழு என்பனவும் உருவாக்கப்படல் வேண்டும். என்கின்ற விடயங்கள் அதில் அடங்கியிருந்தன.
இலங்கையில் பாராளுமன்ற அரசாங்க முறை 1947ம் ஆண்டிலிருந்து 1978ம் ஆண்டுவரை 31 வருடங்களாக அமுலில் இருந்தது. பாராளுமன்ற அரசாங்க முறைமைக்கு உச்ச அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பதற்காக 1972ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது குடியரசுயாப்பில் தேசிய அரசுப் பேரவை அரச அதிகாரத்தின் அதி உயர் கருவியாக மாற்றப்பட்டது நீதித்துறையும் தேசிய அரசுப்பேரவையின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. மக்கள் இறைமைக்கு தடையாக எதுவும் இருக்கக்கூடாது என்பதே இதற்கு காரணமாகக் கூறப்பட்டது.

இந்தப் பாராளுமன்ற அரசாங்க முறைமையில் தமிழ் மக்கள் உச்சக் கட்ட ஒடுக்குமுறையை அனுபவித்தனர். இலங்கைப் பிரஜாவுரிமைச்சட்டம் (1948)இ இந்திய பாக்கிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டம்இ (1949)இ தேர்தல்கள் திருத்தச் சட்டம் (1949)இ சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம்(1964) சிறீமா-சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டம் (1967)இ என்பன மலையக மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டன. இதில் முதல் மூன்று சட்டங்களும் மலையக மக்கள் இலங்கைப் பிரஜை அந்தஸ்தை இல்லாது செய்தன. இந்த அந்தஸ்தை மீளப் பெறுவதற்கு மலையக மக்களின் மூன்று தசாப்தங்களுக்கு மேல் காத்திருந்தனர்.

ஏனைய இரண்டும் மலையக மக்களை அவர்களின் அனுமதி இல்லாமலே நாடுகடத்தலுக்கு பங்களித்தன. இந்த நாடுகடத்தலை ஒரு இனப்படுகொலை என்றும் கூறலாம். இந்தியா-இலங்கை அரசாங்கங்கள் தமது சொந்த நலன்களுக்காக மலையக மக்களை வேட்டையாடின.
1947ம் ஆண்டின் சோல்பரி யாப்பின் மூலமே பாராளுமன்ற அரசாங்க முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. 1948ம் ஆண்டு சுதந்திரம் அந்த முறைமையை அப்படியே ஏற்றக்கொண்டது. பெரும்பான்மை ஜனநாயகம் என்ற பெயரில் ஆட்சி அதிகாரம் முழுமையாக சிங்கள மக்களிடம் வழங்கப்பட்டது.. தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரக் கட்டமைப்பிலிருந்து பலவந்தமாக தூக்கி வீசப்பட்டனர். இந்த தூக்கி வீசுதல் பாராளுமன்ற முறைமையினூடாகத்தான் மேற்கொள்ளப்பட்டது.

சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் பாராளுமன்ற முறைமையினூடாக இரண்டு வழிகளில் ஒடுக்குமுறைகள் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டன. ஒரு பக்கத்தில் அரச கட்டமைப்பு சிங்கள மயமாக்கப்பட்டது. வாளேந்திய சிங்கம் இலங்கையின் தேசியக் கொடியானது. தமிழ்இ முஸ்லீம் மக்களைக் குறிப்பதற்கு செம்மஞ்சள்இ பச்சைக்கோடுகள் மட்டும் இடப்பட்டன. வாளேந்திய சிங்கம் இலங்கையின் இறைமையைக் குறித்தபோது தமிழ்இ முஸ்லீம் மக்களைக் குறித்த செம்மஞ்சள்இ பச்சைக் கோடுகளை வாளேந்திய சிங்கத்தினுள் அடையாளப்படுத்துங்கள் என தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்த போதும் அக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இது இலங்கையின் இறைமைக்குள் தமிழ் மக்கள் இல்லை என்பதை அடையாளப்படுத்தியது. செம்மஞ்சள்இ பச்சைக் கோடுகளையும் சமாந்தரக் கோடுகளாக அடையாளப்படுத்தியதன் மூலம் தமிழ்-முஸ்லீம் மக்கள் ஐக்கியப்படுத்தப்படக் கூடாது என்பது வெளிப்படுத்தப்பட்டது. இந்தக் கொடியினை நிராகரித்து கொடி உருவாக்கக்குழுவிலிருந்த செனட்டர் நடேசன் வெளியேறினார் என்பது வரலாறு. 1972ம் ஆண்டு தேசியக் கொடியில் பௌத்த அடையாளம் இருக்க வேண்டும் என்பதற்காக கொடியின் நான்கு மூலைகளிலும் அரச இலைகள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம்அரசின் அடையாளம் சிங்கள பொளத்த மயமாக்கப்பட்டது.
இன்னோர் பக்கத்தில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதை அழிக்கும் வகையில் கட்டமைப்புசார் இனப்படுகொலை முடுக்கிவிடப்பட்டது.

அது முதலில் நிலப்பறிப்பு என்ற வகையில் வெளிவந்தது. சுதந்திரத்திற்கு முன்னரே அரைப்பொறுப்பாட்சி வழங்கப்பட்ட டொனமூர் காலத்தில் இதற்கு அத்திவாரமிடப்பட்டாலும் சுதந்திரத்தின் பின்னரே அது முடுக்கிவிடப்பட்டது. முதலில் கல்லோயாத்திட்டம் என்ற பெயரில் தற்போதைய அம்பாறை மாவட்டத்திலேயே காணிப்பறிப்பு அரங்கேற்றப்பட்டது. பட்டிப்பளை ஆறு என்கின்ற தமிழ் மக்களுடைய பாரம்பரிய ஆற்றினை மறித்து சேனநாயக்க சமுத்திரம் உருவாக்கப்பட்டது. அதனைச் சுற்றி சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1961ம் ஆண்டு மட்டக்களப்பு தெற்கு பிரதேசத்தை பிரித்து அம்பாறை மாவட்டத்தை உருவாக்கிய போது குடியேற்றப் பிரதேசமான அம்பாறையே மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. இதே காலத்தில் கிழக்கு மாகாணத்தின் முதலாவது சிங்களத் தொகுதியான அம்பாறை தேர்தல் தொகுதியும் உருவாக்கப்பட்டு 1960 தேர்தலில் முதலாவது சிங்களப் பிரதிநிதியும் கிழக்கிலிருந்து தெரிவுசெய்யப்பட்டார். கல்முனையே அம்பாறை மாவட்டத்தின் தலைநகராக இருந்திருக்க வேண்டும். பெரும்பாலான அரச தினைக்களங்கள் அங்குதான் இருந்தன. இது திட்டமிட்டு தவிர்க்கப்பட்டது.

தொடர்ந்து சிங்களமயமாக்கலை அரசியல் ரீதியாக பலப்படுத்துவதற்காக மாவட்ட அரசாங்க செயலக மொழி சிங்களமாக்கப்பட்டது. இத்தனைக்கும் மாவட்டத்தில் பெரும்பான்மையோர் தமிழ் பேசும் மக்களே! சிங்களப் பிரதேசசபைகள் கொள்ளளவிற்கு மேல் உருவாக்கப்பட்டன. மாவட்டத்தின் சனத்தொகையை செயற்கையாக அதிகரிப்பதற்காக மொனராகலை மாவட்டத்துடன் இருந்த மகாஓயாஇ பதியத்தலாவை என்ற இரு சிங்கள பிரதேச செயலர் பிரிவுகள் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.
சுதந்திரத்தைத் தொடர்ந்து தமிழர் தாயகத்தின் மையப் பிரதேசத்தில் காணிப்பறிப்புக்கள் முடுக்கிவிடப்பட்டன. அதற்காக தெரிவுசெய்யப்பட்ட மாவட்டம் தான் திருகோணமலை மாவட்டம்.

இம் மாவட்டத்தில் திட்டமிட்ட விவசாயக் குடியேற்றம்இ சட்டவிரோத விவசாயக் குடியேற்றம்இ வியாபாரக் குடியேற்றம்இ மீனவர் குடியேற்றம்இ கைத்தொழில் குடியேற்றம்இ புனித பிரதேசக் குடியேற்றம்இ முப்படைப் பண்ணைகளுக்கான குடியேற்றங்களுக்கான குடியேற்றம் என அனைத்து குடியேற்ற முறைகளும் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன. அல்லைத் திட்டம்இ கந்தளாய் திட்டம்இ மொறவோவாத் திட்டம்இ மகாதிவுல்வெவ திட்டம்இ பதவியாத்திட்டம் என சிங்கள விவசாயக் குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. திருக்கோணமலை மாவட்டத்தை வில்போல வளைத்து சிங்களத் தேர்தல் தொகுதியான சேருவல தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. சிங்களப் பிரதேச சபைகளும் உருவாக்கப்பட்டன.
தற்போது இக் காணிப்பறிப்பு அடுத்த மைய மாவட்டமான முல்லைத்தீவு மாவட்டம் நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை இதற்காக களமிறக்கப்பட்டுள்ளது. அம்பாறையிலும் திருகோணமலையிலும் பாராளுமன்றஅரசாங்க முறைமை காணிப்பறிப்பை மேற்கொண்ட அதேவேளை முல்லைத்தீவு மாவட்ட காணிப்பறிப்பை ஜனாதிபதி அரசாங்க முறைமை மேற்கொண்டது.
கட்டமைப்புசார் இன அழிப்பு என்பது தமிழ்த் தேசத்தைத் தாங்குகின்ற தூண்களான நிலம்இ மொழிஇ பொருளாதாரம்இ என்பதை அழிப்பதுதான். கட்டமைப்புசார் இன அழிப்பின் இரண்டாவது கட்டம் மொழிப்புறக்கணிப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. 1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து தமிழ் மக்களின் பொருளாதார அடித்தளம் அனைத்து தளங்களிலும் அழிக்கப்பட்டது. யாழ்ப்பாண அரசுக் காலத்தில் தமிழ் மக்கள் வெளிநாட்டு வர்த்தகத்திலும் மேலோங்கியிருந்தனர். தமிழ்ப் பகுதியின் துறைமுகங்கள் வெளிநாட்டு வர்த்தகத்தில் பாரிய பங்களிப்பை வழங்கின. கடல் வளமுமஇ; நில வளமும் உச்ச வகையில் பயன்படுத்தப்பட்டன. அரச சேவையில் தமிழ் மக்கள் உயர் நிலையில் இருந்தனர். இவையெல்லாம் திட்டமிட்டு பலவீனமாக்கப்பட்டன.
தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் கலாச்சாரத்தை அழிப்பதற்கான செயற்பாடுகளும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. பௌத்தர் எவரும் வாழாத இங்களிலும் பௌத்த விகாரைகள் தீடீர் திடீர் என முளைத்தன. அரச மரங்களை தமிழர் தாயகத்தில் கண்டாலே பிடுங்கி எறிய முனையும் அவல நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டனர். அரச மரங்கள் இருக்கும் இடங்களிலெல்லாம் பௌத்த விகாரைகள் முளைத்துவிடும் என்ற அச்சமே இதற்குக் காரணம.; 1970 களில் மூதூர் பிரதேசத்தில் தமிழ் இளைஞர்கள் அரச மரங்களைத் தேடித்தேடித் தறிக்கும் செயற்பாட்டில் இறங்கி இருந்தனர்.
1972ம் ஆண்டு அரசியல் யாப்பு பாராளுமன்ற முறைமைக்கு உச்சவகை அதிகாரத்தைக் கொடுத்தது. பெயரளவில் காப்பீடாக இருந்த சோல்பரி யாப்பின் 29வது பிரிவும் இல்லாமல் செய்யப்பட்டது. ஒரு வகையில் 1972 யாப்பை தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு வழங்கப்பட்ட முழுமையான லைசன்ஸ் எனலாம்.
எனவே ஜனாதிபதி முறைமையிலிருந்து பாராளுமன்ற முறைமைக்கு மாறுவதால் தமிழ் மக்களுக்கு எந்தவித பயனும் கிடைக்கப்போவதில்லை. இந்த மாற்றம் கொதிநீரில் இருந்த எண்ணெய் தாய்ச்சிக்குள் விழுந்த கதையாகத் தான் இது இருக்கும்.
அரசாங்க முறைமையை மாற்றுவதல்ல தமிழ் மக்களின் பிரச்சினை. இது அரசு பற்றிய பிரச்சினை. தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரித்த இலங்கை அரசை உருவாக்குவது பற்றிய பிரச்சினை.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கத்தை தலையில் கொண்டு திரியும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும்இ அவர்களது சீடர்களுக்கும் இந்த உண்மை இப்போதைக்கு புரியப்போவதில்லை.
விதியே! விதியே! தமிழச் சாதியை என்ன செய்ய நினைத்தாய்? என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது