அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு பௌத்த மகா நாயக்கர்கள் ஜனாதிபதிக்கு மீண்டும் கடிதம்

அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு வலியுறுத்தி பௌத்த மகா நாயக்கர்கள் மீண்டும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் நாட்டில் அரசியல், சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.