கோட்டாபயாவை சந்தித்த சட்டத்தரணிகள் சங்கம் பேசப்பட்ட முக்கிய விடயங்கள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் இன்று (08) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் அரச தலைவருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அரச தலைவர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று மகிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.