தாஜ்மகாலில் பூட்டப்பட்ட இரகசிய அறைகளை திறக்கோரிய மனு நிராகரிப்பு

இந்தியாவின் புகழ்பெற்ற நினைவுச் சின்னமான தாஜ் மஹாலில் மூடப்பட்ட 22 அறைகளை திறக்கோரி செய்த மனுவை அலகாபாத் நீதிமன்றம் நிகாரித்துள்ளது.

தாஜ்மகாலில் மூடப்பட்ட 22 அறைகளின் கதவுகளைத் திறக்கத் தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ரஜனீஸ் சிங் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தாஜ்மகால் கட்டிடம் ஒரு சிவன்கோவில் என்றும், அது பற்றிய உண்மையைக் கண்டறிய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கைகளை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனுவைத் நிராகரித்தனர்.

மேலும் , இரகசிய அறைகளில் இந்து கடவுள் இருப்பதாக கூறி வழக்கு தொடுத்த ரஜ்னீஷ் சிங்கிற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

17ஆம் நூற்றாண்டில் ஷாஜஹானால் கட்டப்பட்ட தாஜ்மஹாலுக்கு தினம்தோறும் 12,000 பேர் வரை வருகின்றனர்.

ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் மஹலின் நினைவாக கட்டப்பட்ட இந்த நினைவுச் சின்னம், 1653ல் கட்டிமுடிக்கப்பட்டது.

1983ல் தாஜ்மஹால் யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.