யாழ். பல்கலைகழக மாணவிகளுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் – கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றைய தினம்(16) மாலை இடம்பெற்றுள்ளது.

4 மோட்டார் சைக்களில் வந்த குழு வீட்டுக்குள் புகுந்து ஐன்னல்கள், கதவுகளை சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

குறித்த வீட்டில் யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவிகள் வாடகைக்கு தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்