மைத்திரி எடுத்துள்ள அதிரடி முடிவு- கட்சியில் இருந்து ஓடப்போவது யார்?

அரசாங்கப் பதவிகளை ஏற்கப் போவதில்லை என கட்சி தீர்மானித்திருந்த போதிலும், அதனைத் தாண்டி அமைச்சுப் பதவிகளைப் பெறும் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குவதற்கு மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

அதன்படி,சிறிசேனவுக்கு ஏற்கனவே பல படித்த இளைஞர்களின் பெயர்கள் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.

தற்போது நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவண்ண, ஜகத் புஸ்பகுமார ஆகியோர் கட்சி தீர்மானத்திற்கு புறம்பாக அரசாங்க அமைச்சுகளுக்கு செல்ல தீர்மானித்துள்ளதாகவும் நேற்று மைத்திரிபால சிறிசேனவிடம் இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.

மைத்திரி எடுத்துள்ள அதிரடி முடிவு

அப்படியானால் சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது போன்று ஐவரையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஐந்து பேரையும் கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ஐந்து படித்த இளைஞர்களை நியமிக்க மைத்திரி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.