கேன்ஸ் திரைப்பட விழாவில் உரையாற்றினார் உக்ரேன் ஜனாதிபதி

பிரான்ஸ் நாட்டில் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவானது நேற்று ஆரம்பித்தது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் உக்ரேன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி காணொளி காட்சி வாயிலாக உரையாற்றினார்.

உக்ரேன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி

மேலும் நடிகர் அக்ஷய் குமார், சேகர் கபூர், நவாசுதீன் சித்திக், நடிகர் கமல்ஹாசன், மாதவன், பார்த்திபன், இயக்குநர் பா ரஞ்சித், நடிகைகள், தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ரிக்கி கெஜ் ஆகியோர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் பங்கேற்ற இந்திய பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்று அளிக்கப்பட்டது. வரும் 28ஆம் திகதி வரை இவ்விழா நடைபெற இருக்கிறது. இந்த வருடத்திற்கான கௌரவத்திற்குாிய நாடாக இந்தியா தேர்வு செய்யப்பட்டது.

இதன் தொடக்க விழாவில் உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி உரையாற்றியபோது,

” ரஷ்யாவின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்த தற்போது புது சார்லி சாப்ளின் தேவை. இதற்கிடையில் சினிமா எப்போதும் உண்மையின் பக்கம் நிற்கவேண்டும். இன்றும் சினிமா ஊமையாக இல்லை என்பதை நிரூபிக்க புது சாப்ளின் தேவை” என்று கூறினார்.

ஜெலென்ஸ்கியின் இப்பேச்சுக்கு பலத்த கரவோசை எழுப்பினா். சென்ற 1940 ஆம் வருடத்தில் வெளியாகிய தி கிரேட் டிக்டேட்டர் எனும் திரைப்படத்தில் ஹிட்லர் பற்றி சார்லிசாப்ளினின் பேசும் வசனத்தை மேற்கோள்காட்டி பேசினாா்.

இத்திரைப்பட நிகழ்ச்சியில் “மரியூபோலிஸ் 2” என்ற ஆவணப்படம் சிறப்புத் திரையிடப்பட இருக்கிறது. கடந்தமாதம் உக்ரேனில் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் லிதுவேனியன் திரைப்படத் தயாரிப்பாளரான மந்தாஸ் குவேடராவிசியஸ் என்பவரால் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.