ஶ்ரீலங்காவின் பணவீக்கம் 132 விகிதம்!எச்சரித்துள்ள பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கே

இலங்கையில் அதிகரித்து வரும் பணவீக்கத்தினால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “நாட்டின் ஆண்டு பணவீக்கம் 21.5 விகிதமாக இருந்தாலும், உண்மையான பணவீக்கம் 132 விகிதம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அதிகாரப்பூர்வ பணவீக்க விகிதத்தை விட உண்மையான பணவீக்க விகிதம் 6 மடங்கு அதிகமாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய அதிகரித்த பணவீக்கம் ஒரு பொருளாதாரப் பேரழிவு என்று கூறிய பேராசிரியர், பணக்காரர்களை விட ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவதுதான் இங்கு உண்மையான பிரச்சனை என்று எச்சரித்துள்ளார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இறுதியில் அரசியல் பிரச்சினையே உருவாகும் எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், “இலங்கையில் எல்லாம் நின்றுவிடும் என்று தனக்குத் தோன்றுகிறவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.