பாராளுமன்ற தெரிவுக் குழுக்களின் அதிகாரத்தை அதிகரிக்க நடவடிக்கை-தினேஷ் வலியுறுத்தல்

அரசாங்க கணக்கு பற்றிய குழு (கோப்) மற்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோபா) உட்பட ஏனைய பாராளுமன்ற தெரிவு குழுக்களின் அதிகாரத்த அதிகரிக்க பாராளுமன்ற நிலையியல் கட்டளையை திருத்தம் செய்யும் வகையிலான சட்டமூலம் வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படும் என சபை முதல்வர் தினேஷ் குணவர்தன சபையில் வலியுறுத்தினார்.

Opposition MPs should learn to respect parliamentary traditions

பாராளுமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் நேற்றைய தினம் கூடிய போது நிலையியல் கட்டளை தொடர்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கம் என்ற ரீதியில் விசேட விடயத்தை முன்வைக்கவுள்ளேன்.அரசாங்க கணக்கு பற்றி ய குழு ,அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு ஆகியவற்றிற்கு ஏனைய தெரிவு குழுக்களை காட்டிலும் மேலதிகமாக அதிகாரத்தை வழங்கும் வகையில் பாராளுமன்ற நிலையியல் கட்டளையை திருத்தம் செய்யும் வகையிலான திருத்த சட்டமூலம் அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது சபைக்கு சமர்ப்பிக்கப்படும்.

கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் தலைவர்கள் சிறந்த முறையில் சேவையாற்றி சம்பிரதாய முறைக்கமைய சபைக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.அறிக்கையினை அடுத்தக்கட்ட நகர்விற்கு கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

கோப் மற்றும் கோபா குழுவின் அதிகாரங்களை அதிகரித்தால் ஒரு சிறந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.பாராளுமன்ற நிலையியல் கட்டளையை திருத்தம் செய்யும் வகையிலான சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.