9260 ரூபாவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்றவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியில் 9260 ரூபாவுக்கு ணரு சமையல் எரிவாயு சிலிண்டரை விற்பனை செய்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொலன்னாவ வெல்லம்பிட்டியில் உள்ள பேக்கரியில் இந்த சிலிண்டர் விற்பனை சட்டவிரோதமாக இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது 40 சிலிண்டர்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வது போல சென்றே பொலிஸார் இந்த மோசடியை கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பிட்ட இடம் சமையல் எரிவாயு சிலிண்டரை விற்பனை செய்வதற்காக அனுமதி பெற்ற முகவர் நிலையம் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.