அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற- இனஅழிப்பு தலைவர் கோட்டாபய விருப்பம்

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அந்தோனி அல்பானீஸ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பேணுவதற்கும், அதனை மேலும் வலுப்படுத்துவதற்கும் புதிய பிரதமருடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித்தலைமையிலான கூட்டணி அதிக ஆசனங்களை வென்றுள்ளது. 151 ஆசனங்கள் கொண்ட நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் தொழிலாளர் கட்சிக் கூட்டணி 73 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்றி விருப்பம் – கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு

இதனால் தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தனி அல்பானீஸ் (Anthony Albanese) அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார். சுமார் ஒரு தசாப்த காலத்தில் அவுஸ்திரேலிய தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்கவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

அவுஸ்திரேலியர்கள் “மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்” என்று அல்பானீஸ் மகிழ்ச்சியுடன் ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார். எனினும் அவர் பெரும்பான்மையை பெற முடியுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.