தமிழகத்தில் நீராடச் சென்று பலியான 7 மாணவிகள்!

இந்தியாவில் இன்று மாத்திரம் இரண்டு சந்தர்ப்பங்களில் 7 மற்றும் 5 பேர் பலியான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தமிழகம் கடலுார் நெல்லிக்குப்பம் கெடிலம் ஆற்றில் நீராடச் சென்ற 7 மாணவிகள் நீரில் மூழ்கி பலியாகினர்.

இந்த சம்வவம் இன்று இடம்பெற்றுள்ளது. நீரில் மூழ்கிய 7 பேரையும் மீட்டெடுத்த கிராமமக்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதும் அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர்.

பீகாரில் 5பேர் மரணம்
இதேவேளை பீகாரின் சமஸ்திப்பூர் மாவட்டத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தில் உள்ள 5 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடன் தொல்லைக்காரணமாக இவர்கள் உயிர்களை போக்கிக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.