யாழ் போதனா வைத்தியசாலைக்கு இந்திய அரசாங்கத்தால் உதவி

யாழ் போதனா வைத்தியசாலைக்கு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்திய அரசாங்கம் வழங்கியது.

இம் மருந்துப் பொருட்களை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரிடம் நேரடியாக வழங்கி வைத்தார்.

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் இந்திய துணைத் தூதரகத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இவ்மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை அதிகாரிகள் வைத்தியர்கள் மற்றும் இந்திய துணை தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.