புடினின் எச்சரிக்கையை தொடர்ந்து உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்

காஸ்பியன் கடலில் இருந்து ரஷ்ய போர் விமானங்கள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய நிலையில் உக்ரைன் தலைநகர் கிய்வில் ஒரே இரவில் பல இடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவது தொடர்பாக விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த பின்னணியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாஸ்கோ புதிய இலக்கு
அமெரிக்கா உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கத் தொடங்கினால் மாஸ்கோ புதிய இலக்குகளைத் தாக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

வெடிப்புகளைத் தொடர்ந்து குறைந்தபட்சம் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை எந்த இறப்பும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kyiv இன் ரயில்வே உள்கட்டமைப்பை ரஷ்யா குறிவைப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து உக்ரைனுக்கு வழங்கப்பட்ட T-72 டாங்கிகளை அழித்ததாக மாஸ்கோ தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் ஸ்பெயின்
இதற்கிடையில், விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் போர் டாங்கிகள் உட்பட கனரக ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்ப ஸ்பெயின் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை காலை கியேவில் சூரியன் உதித்தபோது இருண்ட புகை வானத்தில் எழுந்தது. பல இடங்கள் குண்டுவெடிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்தார்.

ரஷ்ய படையினர் காஸ்பியன் கடலில் இருந்து Tu-95 விமானத்தில் இருந்து ஏவுகணைகளை ஏவியது” என்று உக்ரேனிய விமானப்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.