கோட்டாபயவுக்கு எதிராக புதிய பாதையில் களமிறங்குமா கூட்டணி?

    வியத்மகவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏமாற்றிவிட்டதாக அந்த அமைப்பின் தலைவர்,முன்னாள் அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

    சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயற்பாட்டால் அரசியல் ரீதியாக நானும் எனது உறுப்பினர்களும் விரக்தியடைந்துள்ளோம்
    இதன் காரணமாக டலஸ் அழகப்பெரும உட்பட ஏனைய கட்சி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இணைந்து எதிர்காலத்தில் புதிய அரசியல் பாதையில் பிரவேசிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதேவேளை, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்படவுள்ளதாகவும், மஞ்சள் நிறத்தை முன்னிறுத்தி புதிய செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், டிலான் பெரேரா மறைமுகமாக ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.