ஜோ.பைடனை சந்தித்தார் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர்

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பு கடந்த 13 ஆம் திகதியன்று வெள்ளை மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கைக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கி வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகின்றது.

இலங்கையின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மஹிந்த சமரசிங்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எடுத்துக்கூறியுள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவின் திறைசேரியின் ஆசியாவுக்கான உதவி உப செயலாளர் ரொபேர்ட் கப்ரோத், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி உப செயலாளரும், தூதுவருமான கெல்லி கெய்டெர்லிங் ஆகியோர் அடங்கிய குழுவினர் இலங்கை வருகை தரவுள்ளனர்.

இவ்வாறு இலங்கைக்கு வருகை தரும் அமெரிக்க குழு 26 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து உயர் மட்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.