சிறைச்சாலை மறு சீரமைப்பு அமைச்சர் விக்கினேஸ்வரனிடம் – அரசியல் கைதிகளின் விபரம் கையளிப்பு

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை குரலற்றவர்களின் குரல் அமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும்நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரனிடம் கையளித்தது.

நல்லூரில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியதுடன் அரசியல் கைதிகளினுடைய விபரங்களையும் வழங்கினர்.

ஜனாதிபதியை தெரிவு செய்யும்போது அரசியல் கைதி விடுதலை உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் ரணில் விக்ரமசிங்கவிற்கு விக்னேஸ்வரன் ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடும் போது அரசியல் கைதிகளின் விபரங்களை ஜனாதிபதியிடம் கொடுத்து அவர்களின் விடுதலைக்காக வலியுறுத்துவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் உறுதியளித்தார்.