மேலும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்தது சதொச

லங்கா சதொச நிறுவனம் 12 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை விபரம்
மேலும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்தது சதொச | Sathosa Reduced Prices Of Essential Commodities

இதன்படி, விலை குறைக்கப்பட்ட பொருட்களின் புதிய விலை வருமாறு,

பெரிய வெங்காயம் – 180 ரூபா, வெள்ளை சீனி – 216 ரூபா, சிவப்பு அரிசி – 187 ரூபா, வெள்ளை அரிசி (உள்ளூர்) – 179 ரூபா, சம்பா அரிசி (உள்ளூர்) – 210 ரூபா.

வெள்ளை நாடு (உள்ளூர்) – 189 ரூபா, வெள்ளை நாடு (இறக்குமதி) – 180 ரூபா, கீரி சம்பா அரிசி – 239 ரூபா, சிவப்பு பருப்பு – 370 ரூபா, காய்ந்த மிளகாய் – 1730 ரூபா, கோதுமை மாவு – 235 ரூபா, நெத்தலி – 1100 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.