மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா பைடன் – அவர் தெரிவித்திருப்பது என்ன ?

2024 இல் ஜனாதிபதிதேர்தலில் மீண்டும் தான் போட்டியிடக்கூடும் என அமெரிக்கஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் போட்டியிட எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ள பைடன் எனினும் அதனை தற்போது அறிவிப்பதற்கு தயாரில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையின் உயிர்த்த ஞாயிறு சிறுவர் கொண்டாட்டத்திற்கு முன்னதாக என்பிசி செய்தியாளருக்கு பைடன் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் நான்குவருடகாலத்திற்காக தேர்தலில் போட்டியிடும் நோக்கம் குறித்து பைடன் முன்னர் தெரிவித்திருந்தார்.

கடந்த நவம்பரில் செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி வருட இறுதியில் தனது குடும்பத்தினருடன் இது குறித்து ஆராயவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.