டைம் பத்திரிகையின் 2020ம் ஆண்டுக்கான சிறந்த நபர்களாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனும், துணை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிசும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
1927ம் ஆண்டு முதல் செய்திகளில் அதிகம் பேசபடுவோரை தெரிவு செய்து, டைம் பத்திரிகை விருது அளிக்கிறது.
அந்தவகையில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடனும், துணை ஜனாதிபதித் தேர்தலில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிசும் வெற்றி பெற்றனர்.