இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது!

இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் இன்று காலை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

அவரது உடலை பெறுவதற்காக அவரது குடும்பத்தினர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் குழு விமான நிலையத்திற்கு வந்தனர்.

கடந்த7ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து அனுலா ரத்நாயக்க காணாமல் போயிருந்தார்.

பின்னர், இராணுவ மோதலின் போது அவர் உயிரிழந்ததாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

அனுலா ரத்நாயக்க 10 வருடங்கள் இஸ்ரேலில் பணியாற்றியுள்ளார்.

49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் களனி எரியவெட்டிய பிரதேசத்தில் வசித்து வந்தவர்.