இலங்கை vs பங்களாதேஷ் – முதல் ODI இன்று!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (20) நடைபெறவுள்ளது.
இலங்கை மகளிர் அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு-20 (T20) போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இந்தத் தொடரில் இலங்கை அணிக்கு சாமரி அத்தபத்து தலைமை தாங்குகிறார், பங்களாதேஷ் அணியை நிகார் சுல்தானா வழிநடத்துகிறார்.
இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக நடைபெற்ற 5 ஒருநாள் போட்டிகளில் 3 போட்டிகளில் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையினால் கைவிடப்பட்டதுடன், மற்றைய போட்டி தீர்மானமின்றி முடிவடைந்தது.
பங்களாதேஷின் ராஜஷாஹி (Rajshahi) நகரில் நடைபெறும் இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
Follow & Share




