எரிபொருள் விலை அதிரடி உயர்வு

உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 93.40 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 102.3 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேவேளை, இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.அதன்படி, அதன் விலை 2.722 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் அமைதியற்ற சூழல் மற்றும் விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் காரணமாக எரிசக்தி சந்தையில் இந்த சடுதியான விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
Follow & Share




