யாழ்தேவி மீண்டும் பயணத்தில்! கோட்டை – காங்கேசன்துறை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையிலான பிரபல யாழ்தேவி தொடருந்து சேவை இன்று (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
புதிய அட்டவணையின்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் யாழ்தேவி தொடருந்து இயக்கப்படும்.
அதேபோல், காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு தினங்களில் சேவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த யாழ்தேவி தொடருந்தில், பயணிகளின் வசதிக்காக குளிரூட்டப்பட்ட நான்கு முதல் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும், பயணிகள் முன்கூட்டியே ஆசனங்களை முன்பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பயணிகளின் வசதியை மேம்படுத்தும் இந்த நடவடிக்கை, வடக்கு மக்களுக்கும் தலைநகருக்கும் இடையிலான பயணத்தை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




