LATEST
கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!
உள்ளூர்

சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு எச்சரிக்கை தீவிரம்.

May 22, 2026 · Claude

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தினால் இன்று (22) காலை 9 மணிக்கு வௌியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவான்வெல்ல மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, குருவிட்ட, எஹலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனால் குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் அனர்த்தங்கள் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அதேவேளை கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க, பாதுக்கை, கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுல்ல, கிரிஎல்ல, எலபாத்த, கலவானை, நிவித்திகல, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, களுத்துறை மாவட்டத்தின் ஹொரனை, புளத்சிங்கள, இங்கிரிய, பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹூபிட்டிய, களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை மற்றும் மத்துகம மற்றும் கம்பஹா மாவட்டத்தின் மீரிகம, திவுலப்பிட்டிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›