LATEST
டிரம்பின் புதிய தேர்தல் முன்மொழிவுகள் அமெரிக்க அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. கொழும்பில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கை! 2025 ஆம் ஆண்டுக்கான G.C.E. உயர்நிலைத் தேர்வு மறுமதிப்பீட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. வனவிலங்கு அதிகாரிகளின் அதிரடி வேட்டை! ஒரே நாளில் 5 உயிர்கள் பலி! சாலை விபத்துகள் அதிகரிப்பு! 2027 இல் அஸ்வெசும திட்டத்தில் இருந்து 4 லட்சம் குடும்பங்கள் நீக்கம்! தீவிரமடையும் தென்மேற்கு பருவக்காற்று: மழையுடன் கூடிய பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை! VAT சட்டத்தில் முக்கிய மாற்றம்! ஆண்டுக்கு ரூ.60 மில்லியன் பதிவு வரம்பு தொடர்கிறது. டிரம்பின் புதிய தேர்தல் முன்மொழிவுகள் அமெரிக்க அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. கொழும்பில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கை! 2025 ஆம் ஆண்டுக்கான G.C.E. உயர்நிலைத் தேர்வு மறுமதிப்பீட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. வனவிலங்கு அதிகாரிகளின் அதிரடி வேட்டை! ஒரே நாளில் 5 உயிர்கள் பலி! சாலை விபத்துகள் அதிகரிப்பு! 2027 இல் அஸ்வெசும திட்டத்தில் இருந்து 4 லட்சம் குடும்பங்கள் நீக்கம்! தீவிரமடையும் தென்மேற்கு பருவக்காற்று: மழையுடன் கூடிய பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை! VAT சட்டத்தில் முக்கிய மாற்றம்! ஆண்டுக்கு ரூ.60 மில்லியன் பதிவு வரம்பு தொடர்கிறது.
Uncategorized

2027 இல் அஸ்வெசும திட்டத்தில் இருந்து 4 லட்சம் குடும்பங்கள் நீக்கம்!

July 5, 2026 · National Tamil LK

பொருளாதார மீட்பு நடவடிக்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அமைய, ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தில் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் மேலும் 400,000 குடும்பங்கள் இந்த நலன்புரித் திட்டத்திலிருந்து நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, தற்போதைய மறு ஆய்வுகளின்படி இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 4 லட்சம் குடும்பங்கள் இத்திட்டத்திலிருந்து வெளியேற உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், 2028ஆம் ஆண்டின் இறுதிக்குள் ‘மிகவும் ஏழ்மையான’ பிரிவினரைத் தவிர மற்ற அனைவரும் இந்த திட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். அதற்குப் பதிலாக 2030ஆம் ஆண்டிற்குள் இவ்வாறான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களை வறுமையிலிருந்து மீட்பதே அரசாங்கத்தின் நீண்டகால நோக்கம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.