LATEST
ஆகஸ்டை நினைத்தாலே பயம்! ஜப்பானில் வெப்ப அலை தீவிரம்! தேசிய ஒருமைப்பாட்டு வாரம் ஜூலை 27 முதல் ஆரம்பம்! ரூ.214.7 பில்லியன் பணமோசடி! துபாய் போதை வலையமைப்பு அம்பலம்! FBC பரிசோதனை ரூ.400 தான்! அதிகம் வசூலித்தால் புகார் செய்யுங்கள்! உயர்தரத் தேர்வு குறித்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! இரத்தப் பரிசோதனைக்கு ரூ.400க்கு பதிலாக ரூ.550 வசூல்! மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள், காலி கரையோரப் பகுதிகளில் காலை நேரத்தில் சிறிதளவு மழை பெய்யலாம். கன்னியா விவகாரம் மீண்டும் சூடுபிடிப்பு ஆகஸ்டை நினைத்தாலே பயம்! ஜப்பானில் வெப்ப அலை தீவிரம்! தேசிய ஒருமைப்பாட்டு வாரம் ஜூலை 27 முதல் ஆரம்பம்! ரூ.214.7 பில்லியன் பணமோசடி! துபாய் போதை வலையமைப்பு அம்பலம்! FBC பரிசோதனை ரூ.400 தான்! அதிகம் வசூலித்தால் புகார் செய்யுங்கள்! உயர்தரத் தேர்வு குறித்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! இரத்தப் பரிசோதனைக்கு ரூ.400க்கு பதிலாக ரூ.550 வசூல்! மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள், காலி கரையோரப் பகுதிகளில் காலை நேரத்தில் சிறிதளவு மழை பெய்யலாம். கன்னியா விவகாரம் மீண்டும் சூடுபிடிப்பு
உலகம்

மட்டக்களப்பில் புதிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு பச்சைக்கொடி!

July 22, 2026 · National Tamil LK

மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ முதல்வர் திரு. சிவம் பாக்கியநாதன் அவர்களும், மாநகர சபையின் கௌரவ பிரதி முதல்வர் திரு. வைரமுத்து தினேஸ்குமார் அவர்களும் நேற்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர்.

இவ் விஜயத்தின் போது இந்திய துனைத் தூதுவர் (Consul General) திரு.சாய் முரளி அவர்களை உத்தியோகபூர்வமாக சந்திப்பினை மேற்கொண்டு கலந்துரையாடல் மேற்கொண்டனர்.

இந்த சந்திப்பின் பிரதான நோக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நீடித்த அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதாகும். இதன் அடிப்படையில், மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ முதல்வர் அவர்களால் மாநகர சபையின் எதிர்கால அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட மூன்று முக்கிய திட்ட முன்மொழிவுகள் இந்திய துனைத் தூதுவரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

அவற்றில், மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் பொதுமக்களின் நீண்டகால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய கலாசார மண்டபம் ஒன்றை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவு சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது. இத்திட்டத்தின் சமூக, கலாசார மற்றும் கல்வி முக்கியத்துவங்களை ஆராய்ந்த துனைத் தூதுவர், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதுடன், திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இணக்கம் தெரிவித்தார்.

மேலும், மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நலன் கருதி முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தொடர்ந்து பங்களிப்பதற்கும், எதிர்காலத்தில் பல்வேறு சமூக மற்றும் மனிதாபிமானத் திட்டங்களை இணைந்து செயல்படுத்துவதற்கும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் மாநகர முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் அவர்களுடன், சென்னை Sun City Rotary Club தன்வந்தரி திட்டத் தலைவர் திரு. T. R. தனு சேகர் அவர்களுக்கும், Sri Lanka Moldies Rotary Club வடகிழக்கு உறுப்பினர் செயற்கைத் தலைவர் திரு. ம. ஜெகன் வண்ணன் அவர்களும் இணைந்து கொண்டனர்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு, மட்டக்களப்பு மாநகர சபைக்கும் சமூக சேவை அமைப்புகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலையான அபிவிருத்தியை நோக்கிய முக்கிய முன்னேற்றமாகவும் அமைகிறது.

Related Stories

Explore More ›