கன்னியா விவகாரம் மீண்டும் சூடுபிடிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா என்ற பிரதேசத்தில் இன்று காலை புதிய கட்டுமானப் பணிகளை தொல்பொருள் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளரை தொடர்புக் கொண்டு உரையாட முயற்சித்தேன்.அண்மையில் அவரை சந்தித்து ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டோம்.
கன்னியா பகுதி தொடர்பில் 2020 ஆம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மதம் சார்ந்த எவ்வித கட்டுமானங்களையும் மேற்கொள்ள கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் நீதிமன்ற உத்தரவுக்கு அப்பாற்பட்டு கன்னியா பகுதியில் இன்று காலை மாவட்ட அரசாங்க அதிபரும் ,ஏனைய அரச அதிகாரிகளும் ஒன்றிணைந்து மதம் சார்ந்த கட்டுமானப் பணியை ஆரம்பித்துள்ளார்கள்.இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாகவே தற்போது இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.எமது கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளார்.
பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாங்கள் முயற்சிக்கின்ற பின்னணியில் இன்றைய சம்பவம் தொல்பொருள் திணைக்களம் தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
இதற்கு பதிலளித்த புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் சுனில் செனவி,
நீதிமன்ற தீர்ப்பு காணப்படுமாயின் அது குறித்து நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும்.
தற்போதைய நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் நேரடியாக பதிலளிக்க முடியாது.
தொல்பொருள் திணைக்களம் தொடர்பில் சந்தேகம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தொல்பொருள் சட்டத்துக்கு அமைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.




