LATEST
ஆகஸ்டை நினைத்தாலே பயம்! ஜப்பானில் வெப்ப அலை தீவிரம்! தேசிய ஒருமைப்பாட்டு வாரம் ஜூலை 27 முதல் ஆரம்பம்! ரூ.214.7 பில்லியன் பணமோசடி! துபாய் போதை வலையமைப்பு அம்பலம்! FBC பரிசோதனை ரூ.400 தான்! அதிகம் வசூலித்தால் புகார் செய்யுங்கள்! உயர்தரத் தேர்வு குறித்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! இரத்தப் பரிசோதனைக்கு ரூ.400க்கு பதிலாக ரூ.550 வசூல்! மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள், காலி கரையோரப் பகுதிகளில் காலை நேரத்தில் சிறிதளவு மழை பெய்யலாம். கன்னியா விவகாரம் மீண்டும் சூடுபிடிப்பு ஆகஸ்டை நினைத்தாலே பயம்! ஜப்பானில் வெப்ப அலை தீவிரம்! தேசிய ஒருமைப்பாட்டு வாரம் ஜூலை 27 முதல் ஆரம்பம்! ரூ.214.7 பில்லியன் பணமோசடி! துபாய் போதை வலையமைப்பு அம்பலம்! FBC பரிசோதனை ரூ.400 தான்! அதிகம் வசூலித்தால் புகார் செய்யுங்கள்! உயர்தரத் தேர்வு குறித்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! இரத்தப் பரிசோதனைக்கு ரூ.400க்கு பதிலாக ரூ.550 வசூல்! மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள், காலி கரையோரப் பகுதிகளில் காலை நேரத்தில் சிறிதளவு மழை பெய்யலாம். கன்னியா விவகாரம் மீண்டும் சூடுபிடிப்பு
உள்ளூர்

மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள், காலி கரையோரப் பகுதிகளில் காலை நேரத்தில் சிறிதளவு மழை பெய்யலாம்.

July 23, 2026 · National Tamil LK

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேநேரம் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும்.

வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை நீர்கொழும்பிலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றராகக் காணப்படும்.

கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. captions

Related Stories

Explore More ›