பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு: இன்றைய வானிலை நிலவரம்!

இன்றைய தினத்திற்கான வானிலை நிலவரங்களை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கடற்பிராந்தியங்களோடு இணைந்த காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
எனினும், நாட்டின் மற்றைய அனைத்துப் பகுதிகளிலும் வழமைபோன்று வறண்ட வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுடன், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது சற்று அதிகரித்து, மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Follow & Share




