LATEST
நீதிபதிகள் ஓய்வு வயது விவகாரத்தில் புதிய விளக்கம் அருகம்பேவில் சுற்றுலா தகவல் மையம் அமைக்கப்படுகிறது! தேங்கும் வழக்குகள் குறித்து பாராளுமன்றத்தில் சூடுபிடிக்கும் விவாதம்! மூன்று மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை! பரீட்சைத் திணைக்களம் அவசர ஆலோசனையில்! கடலோர மக்களே கவனம்! கடல் மிகவும் கொந்தளிப்பாகும். பாறை சரிவு அபாயம்! பிரதான சாலை மூடப்பட்டது கனமழை எதிரொலி! 4 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை நீதிபதிகள் ஓய்வு வயது விவகாரத்தில் புதிய விளக்கம் அருகம்பேவில் சுற்றுலா தகவல் மையம் அமைக்கப்படுகிறது! தேங்கும் வழக்குகள் குறித்து பாராளுமன்றத்தில் சூடுபிடிக்கும் விவாதம்! மூன்று மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை! பரீட்சைத் திணைக்களம் அவசர ஆலோசனையில்! கடலோர மக்களே கவனம்! கடல் மிகவும் கொந்தளிப்பாகும். பாறை சரிவு அபாயம்! பிரதான சாலை மூடப்பட்டது கனமழை எதிரொலி! 4 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை
உள்ளூர்

தேங்கும் வழக்குகள் குறித்து பாராளுமன்றத்தில் சூடுபிடிக்கும் விவாதம்!

August 4, 2026 · National Tamil LK

தேங்கிக் கிடக்கும் வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்காக தெரிவுக்குழுவொன்றைக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகரிடம் முன்மொழிவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை நீதித்துறை முறைமைக்குள் தற்போது 1.1 மில்லியன் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக நீதி அமைச்சின் தரவுகள் சுட்டிக்காட்டுவதால், இந்த வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்கான முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நேற்று முன்மொழிவொன்றில் கையொப்பமிடப்பட்டது. 

இந்த முன்மொழிவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுவினர் கையொப்பமிட்டனர். 

இதன்படி, அந்த முன்மொழிவை இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுவினர் நடவடிக்கை எடுத்தனர்.

Related Stories

Explore More ›